மாசி 1 சமஸ்டி தீக்ஷா
அருணாசலம்.
எம்பெருமான் பரமேஸ்வரனின் பரம கருணையினால் வருடம் தோறும் மாசி 1ஆம் நாள் சமஸ்டி தீக்ஷாவைபவமானது வெகு விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
அவ்வகையில் இவ்வருடம் புதுச்சேரி திருக்காஞ்சி ஸ்ரீ கெங்கவராக நதீஸ்வரர் திருத்தலத்திலே #சிவ நெறியை முறையாக பின்பற்ற விரும்பும் சிவ அடியார்களுக்கான சிவதீக்ஷா வைபவம் நமது சைவ சாஸ்த்ர ப்ரசார ஸபா shaiva shashtra prachara sabha ர பிரச்சார ஸபா மற்றும் #சைவ சமய மரபு நூல் பாதுகாப்புக் கழகமும் இணைந்து வெகு விமர்சையாக நடத்தப்பட்டது.
வைபவத்தில் ஆசார்ய சுவாமிகளாக சிவ ஸ்ரீ சீனிவாச சிவாசார்யார் சுவாமிகளும் சாதகர்களாக சிவ ஸ்ரீ திருக்குமர சிவாசார்யார் சுவாமிகளும் சிவஸ்ரீ முகேஷ் சிவம்
சிவஸ்ரீ ப்ரகதீஸ்வர சிவம்.
மேலும் நமது அழைப்பை ஏற்று #புதுச்சேரி மாநில வேளாண்துறை அமைச்சரும் கலந்து கொண்டார்கள்.
சிவாகம டிரஸ்டின் சார்பாக சிவ ஸ்ரீ மஞ்சுநாத சிவம் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
இந்த வைபவத்தை முன்னிருந்து ஏற்பாடு செய்து கொடுத்த சைவ சமய மரபணுள் பாதுகாப்பு கழக நிறுவனத் தலைவர் சிவஸ்ரீ M. சரவண சிவாசாரர்யர்
அவர்களுக்கும் என இந்நிகழ்ச்சி கலந்து கொண்டு சிறப்பாக நடைபெற உதவி செய்த அனைவருக்கும் நன்றி கலந்த நமஸ்காரங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
