சைவ சித்தாந்த நூல் கற்கை

அருணாசலம்
திருவண்ணாமலை, சைவ சாஸ்த்ர ப்ரசார ஸபா வின்
சைவ சாஸ்த்ர வித்யாசாலை
மற்றும்
சைவ ஆராய்ச்சி மையம், புதுச்சேரி
CENTRE FOR SHAIVA STUDIES, PONDICHERRY
இணைந்து நடத்தும் (இணையவழி)
சைவ சித்தாந்த நூல் கற்கை
SAIVASIDDHANTA TEXTS READING CLASS
சைவ சித்தாந்தம் கற்க ஓர் அறிய வாய்ப்பு !!!
சைவ சித்தாந்தத்தின் அடிப்படைத் தத்துவக் கொள்கைகளை முறையாக விளக்குபவை எட்டு முக்கிய வடமொழி நூல்களின் தொகுப்பான அஷ்டப்ரகரணம் ஆகும். இந்நூல்கள் சைவ சித்தாந்தத்தின் விரிவான தத்துவக் கருத்துகளை அறிந்து கொள்ள உதவும் அடிப்படை நூல்களாக இருந்து, மாணவர்களுக்கும் சைவ சித்தாந்தத்தை ஆராய விரும்பும் அறிஞர்களுக்கும் முக்கியமான வழிகாட்டியாக விளங்குகின்றன. இவ்வகையான இன்றியமையாத அஷ்டப்ரகரண நூல்களின் கருத்துக்களை அவற்றைக் கற்க விரும்புபவர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் சைவ சித்தாந்த நூல் கற்கை என்னும் இணையவழி வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட இருக்கின்றன. இவ்வகுப்புகள் முதலில் “தத்துவப் பிரகாசம்” என்னும் நூலின் பயிலரங்கத்துடன் தொடங்குகின்றன; ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட இந்த தத்துவப் பிரகாசம் சைவசித்தாந்தத்தின் தத்துவங்களின் இயல்பையும் அடிப்படை போதனைகளையும் விளக்குகின்ற முக்கியமான நூலாகும்.
The Aṣṭaprakaraṇam consists of eight important Sanskrit treatises that present the fundamental philosophical doctrines of Saiva Siddhanta in a systematic and concise manner. As the foundational works for understanding the metaphysics and theology of the tradition, they serve as an important guide for students and seekers of Śaiva Siddhānta philosophy. With the aim of making these classical works accessible to a wider audience, an online Saivasiddhanta Texts Reading Class on the Ashtaprakarana & Saiva Siddhantha texts is going to be organized. It will begin with the study of “Tattva Prakāśam,” which expounds lucidly the fundamental concepts of the Saivasiddhanta system.
ஆரம்ப நாள்:
ஸ்வஸ்திஶ்ரீ பராபவ வருடம், சித்திரை மாதம் 01ஆம் தேதி முதல்
14-04-2026, செவ்வாய் கிழமை
காலம்:
96 வகுப்புகள்
வாரம் இரு வகுப்புகள் (திங்கள் மற்றும் புதன் கிழமைகளில்)
நேரம்:
மாலை 5 முதல் 6 மணி வரை
பயிற்சி ஆசிரியர்கள்:
அஷ்டப்ரகரணம் (8 நூல்கள்):
Dr. T. கணேசன்,
இயக்குநர், சைவ ஆராய்ச்சி மையம், புதுச்சேரி
மூத்த சைவசித்தாந்த ஆராய்ச்சியாளர், French Institute of Pondicherry.
&
“சேக்கிழார் சீர் பரவுவார்”
திருவையாறு சாம்பவஶ்ரீ வே. ரமணன் சர்மா, சிதம்பரம்.
பயிற்சி வகுப்பிற்கான பாடத் திட்டங்கள் மற்றும் விவரங்கள்
பாடத்திட்டத்தின் மொத்த நாட்கள்
இணையதளம் மூலமாக சைவ சித்தாந்த வகுப்புகள் மொத்தம் 96 வகுப்புகள் (வாரம் ஒரு வகுப்பு) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பயிற்சியின் நோக்கம்
சைவ சித்தாந்த நூற்கருத்துகளை எளிமையாகக் கற்பித்தல்.
இப்பாடதிட்டத்தில் சேருவதற்கான தகுதிகள்
- தமிழ் எழுத்துக்களை எழுதவும் படிக்கவும் நன்கு தெரிந்திருக்க வேண்டும்.
- வடமொழி அறிவு சிறப்பு. (கட்டாயம் இல்லை)
- ஆண் பெண் என அனைவரும் கலந்து கொள்ளலாம்.
- குறைந்தபட்சம் 15 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.
பாடத்திட்டம்
- தத்துவப் பிரகாசம் (Tattva Prakāśam)
- தத்துவ சங்கிரகம் (Tattva Saṅgraham)
- தத்துவத்திரய நிர்ணயம் (Tattvatraya Nirṇayam)
- ரத்னத்திரயம் (Ratnatrayam)
- போக காரிகை (Bhoga Kārikā)
- மோக்ஷ காரிகை (Mokṣa Kārikā)
- நாத காரிகை (Nāda Kārikā)
- பரமோக்ஷ நிராஸ காரிகை (Paramokṣa Nirāsa Kārikā)
- சித்தாந்த ப்ரகாசிகா (Siddhantaprakāśikā)
- மேலும் பல சைவ சித்தாந்த நூல்கள்
சான்றிதழ்
- இப்பயிற்சியில் முழுமையாக கலந்து கொள்பவர்களுக்கு பயிற்சி நிறைவு பெற்றதற்கான சான்றிதழ், வழங்கப்படும்.
பயிற்சிக் கட்டணம்
இந்த வகுப்பில் சேர விரும்புபவர்கள் மாதம் ரூபாய் 600/- மட்டும் ஸபையின் வளர்ச்சிகொடையாக கீழ்காணும் வங்கி கணக்கில் செலுத்தி விட்டு அதன் ரசீதை, தாங்கள் பூர்த்திசெய்யும் முன்பதிவுப் படிவத்தில் இணைக்க வேண்டும்.
வங்கியின் மூலம் அனுப்புவதற்கான விவரம்.
Bank Details
Name – SIVAAGAMA TRUST
Bank – IDBI Bank – Thiruvannamalai Branch
SB A/C NO-1431104000154284
IFSC Code-IBKL0001431
மேலும் விவரங்களுக்கு கீழ்க்காணும் கைப்பேசி எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாக தொடர்பு கொள்ளலாம்.
சிவஸ்ரீ நரேந்த்ர சிவம்
பயிற்சி ஒருங்கிணைப்பாளர்
சைவ ஆராய்ச்சி மையம்/ சைவ சாஸ்திர ப்ரசார சபா
புதுச்சேரி, Cell/whatsapp: +91 78713 93832
சைவ சித்தாந்தம்:-
सिद्धान्तं कामिकादिस्यात् नास्मात् परमनुत्तमम् || १०९ ||
– आचार्याभिषेकविधिः, श्रीमत्कामिकागमम् (उत्तरम्)
சைவத்தின் சித்தாந்த பிரிவாகிய காமிகம் முதலிய 28 மூல-ஆகமங்களும், அவற்றின் உப-ஆகமங்களும் “சித்தாந்தம்” எனப்படும். இதனைவிட மேலானது ஒன்றும் இல்லை.
हेयोपादेयवस्तूनां निर्णये परमार्थतः। तत्सर्वं अधरीकृत्य शैवसिद्धान्त ईरितः॥१०९॥
– तन्त्रावतारविधिः, श्रीमत्कामिकागमम् (पूर्वम्)
ஏற்றுக் கொள்ளத்தக்க மற்றும் விடத்தக்க வஸ்துக்களை மிக மிக வாஸ்தவமாக நிர்ணயிக்கும் விஷயத்தில், அபரஞானமாகிய இதர சாஸ்த்ரங்களைப் புறக்கணித்து விட்டு, சைவ சித்தாந்தமானது சொல்லப்பட்டது.
குறிப்பு:- இங்கு “சைவ-சித்தாந்தம்” என்ற தொகைச்சொல் ஆகமத்திலேயே மூல ஆகமங்களின் பெயர்ச்சொல்லாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல்கூறிய விபரங்களை படித்துவிட்டு Registration செய்யவும்.
Registration Link
