தேவாரம் வேதசாரம்


சிவமயம்
அருணாசலம்

சைவசாஸ்த்ர  ப்ரசார சபா 

பெருமையுடன் நடத்தும்

சிறப்பு வகுப்பு

” காசிவாசி சாம்பவஶ்ரீ செந்திநாதய்யர் ” 

அவர்கள் இயற்றிய

” தேவாரம் வேதசாரம் “

(இணையதள வழியில்) 

வகுப்பு ஆரம்ப நாள்:
சித்திரை மாதம் 21 (04-05-2025)

வகுப்பு காலம்:
5 மாதங்கள் – பிரதி ஞாயிற்றுக்கிழமை

நேரம்:
மாலை 4 முதல் 5 மணி வரை

பயிற்சி ஆசிரியர்:
“ சேக்கிழார் சீர் பரவுவார் ”
திருவையாறு சாம்பவஶ்ரீ  வே. ரமணன் சர்மா,
சிதம்பரம்

“நால்வேதம் ஆறங்கம் ஆனாய் போற்றி” மற்றும் “வடமொழியுந் தென்றமிழும் மறைகள் நான்கும் ஆனவன் காண் ” போன்ற தேவார வாக்கியங்கள் மூலம் வேதமாகவே சிவபெருமான் உள்ளார் என்பதை நாம் நன்கு அறிந்திருக்கிறோம்.

“ஈஶானஸ்ஸர்வவித்யாநாம்” போன்ற வேதவாக்கியங்களாலும், “வேதாகமௌ மயா ப்ரொக்தௌ” போன்ற சிவாகம வாக்கியங்களாலும், சிவபெருமானிடமிருந்து வந்தது (வேதம், ஶிவாககமம்) அவரையே அறிவிக்கிறதென்பதாலும்,வேத-சிவாகம-புராண-இதிஹாசங்களின் மெய்ப்பொருளாகத் திகழும் சிவபெருமானை, அந்த வேதக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு தமிழில் போற்றித் துதித்து, “தேவாரம்” போன்றவற்றை நமது சைவ சமய ஆசார்யர்கள் அருளியுள்ளனர்.ஆதிமூல முதல்-நூலாகிய நான்மறைகள் ஶிவபெருமானை போற்றி துதிதுள்ளதை போன்றே, நமது ஶைவ-ஸமய ஆசார்யர்களும் போற்றியுள்ளதை நன்கு உணர்ந்துகொள்ள “தேவாரம் வேதசாரம் ” என்கிற நூலின் சிறப்பு வகுப்பின் வாயிலாக ஶிவநேயசெல்வர்களுக்கு திருவருள் கூட்டியுள்ளது.

பயிற்சி வகுப்பிற்கான பாடத் திட்டங்கள் மற்றும் விவரங்கள்

பாடத்திட்டத்தில் மொத்த நாட்கள்
மொத்தம் 05 மாதங்கள் (பிரதி ஞாயிறு) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பயிற்சியின் நோக்கம்
நான்மறைகள் ஶிவபெருமானை துதிப்பது போல், தேவாரமும் எவ்வாறு ஶிவபெருமானை துதிக்கிறது என்பதை ஒப்பிட்டு அறிந்து கொண்டு, அதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வது.

இப்பாடதிட்டத்தில் சேருவதற்கான தகுதிகள்
தமிழ் எழுத, படிக்க மற்றும் பேச தெரிந்திருக்க வேண்டும்.
ஆண் பெண் என அனைவரும் கலந்து கொள்ளலாம்.
குறைந்தபட்சம் பத்து வயதுக்கு மேல் இருப்பது சிறப்பு.

பாடத்திட்டம்
தேவாரம் வேதசாரம்

சான்றிதழ்
இப்பயிற்சியில் முழுமையாக கலந்து கொள்பவர்களுக்கு பயிற்சி நிறைவு பெற்றதற்கான சான்றிதழ், வழங்கப்படும்.

பயிற்சிக் கட்டணம்
இந்த வகுப்பில் சேர விரும்புபவர்கள் மாதம் ரூபாய் 300 மட்டும் ஸபையின் வளர்ச்சிகொடையாக கீழ்காணும் வங்கி கணக்கில் செலுத்தி விட்டு அதன் ரசீதை, தாங்கள் பூர்த்திசெய்யும் முன்பதிவு படிவத்தில் இணைகக வேண்டும்.

வங்கியின் மூலம் அனுப்புவதற்கான விவரம்.

Bank Details

Name – SIVAAGAMA TRUST
Bank – IDBI Bank
SB A/C NO-1431104000154284
IFSC Code-IBKL0001431
Thiruvannamalai Branch

மேலும் விவரங்களுக்கு

கீழ்காணும் நம்பருக்கு வாட்ஸ்அப் மூலமாக தொடர்புகொள்ளலாம். 

ஸ்ரீ நரேந்த்ர ஶிவம்
பயிற்சி ஒருங்கிணைப்பாளர்
சைவசாஸ்திர ப்ரசார சபா.
புதுச்சேரி
Cell/whatsapp: 7871393832

Register Now

https://sivaagama.org